இலங்கை செய்தி

QR முறை விரைவில் நீக்கம்: புதன் விடுமுறையும் மாறும்!

இலங்கைக்கு இம்மாதம் 9 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுவருகின்றது.

குறிப்பாக பற்றாக்குறையின் உச்சக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விரைவில் படிப்படியாக நீக்கப்படலாம்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருள் தேவையைக் குறைப்பதற்காக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த புதன்கிழமை, விரைவில் ஒரு வழக்கமான வேலை நாளாக மாறக்கூடிய சூழ்நிலை உள்ளது.

விநியோக நிலைமைகள் மேலும் முன்னேற்றமடைந்தவுடன், QR குறியீட்டு முறை மற்றும் ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறை ஆகியவை நீக்கப்படும் என்றும் அமைச்சர் விஜித மேலும் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!