புதிய அரசமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு: அரசு உறுதி!
“தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக நிச்சயம் தீர்வு காணப்படும். புதிய அரசமைப்புக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் undaralingam Pradeep தெரிவித்தார்.
“ இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியல் அதிகாரத்துக்காக தீர்வை கொண்டுவருவதைவிட நிலையான தீர்வை அடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஜனரஞ்சக முடிவுகளைவிட, அனைத்து மக்களும் ஏற்கும் முடிவாக அது அமைய வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் இந்த அரசாங்கம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இனவாதம் இல்லாது செய்யப்பட்டுவருகின்றது.
புதிய அரசமைப்பு ஊடாக அனைத்து இன மக்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இந்நாட்டில் சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன.
புதிய அரசமைப்புக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.” – எனவும் அவர் கூறினார்.




