புடின் புதுடெல்லி வருகை: விமான நிலையத்தில் மோடி நேரில் வரவேற்பு.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin), உக்ரைன் போர் தொடங்கி சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது பழைய நண்பன் இந்தியாவிற்கான முதல் விஜயமாக, இன்று (வியாழக்கிழமை) புதுடெல்லியில் வந்து இறங்கினார்.
விமான நிலையத்தில் அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார்.
புடினுடன் அவரது உயர் மட்ட அமைச்சர்கள் மற்றும் ஒரு பெரிய ரஷ்ய வர்த்தகக் குழுவினரும் இந்த இரண்டு நாள் பயணத்தில் இணைந்துள்ளனர்.
அவர்கள் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு அப்பால், மாஸ்கோவிழும் புதுடெல்லியிலும் தங்கள் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்த முயல்கின்றனர்.
புதுடெல்லி விமான நிலையத்தில் புடினை வரவேற்கப் பிரதமர் மோடி நேரில் சென்றது ஒரு அரிதான செயலாகும், ஏனெனில் பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்களை இந்தியாவின் மூத்த அமைச்சர்களே சென்று வரவேற்பது வழக்கம்.
விமானத்திலிருந்து இறங்கி வந்த புடினைச் சிவப்புக் கம்பளத்தில் மோடி அன்புடன் அணைத்துக்கொண்டார்.
சமீபத்தில், பிப்ரவரியில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (atar’s Emir Sheikh Tamim bin Hamad al-Thani)வந்தபோது மோடி விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.
அத்துடன், 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ( Donald Trump) இந்தியாவிற்கு விஜயம் செய்தபோதும் மோடி விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.
இன்று (வியாழக்கிழமை) இரவு புடினுக்கு மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். இரு தலைவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) உச்சி மாநாட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.




