ChatGPT பயனர்கள் மத்தியில் உளவியல் தாக்கம் – OpenAI வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில், உளவியல் தாக்கங்கள் அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உளவியல் தாக்கங்கள் மற்றும் மனநல நெருக்கடிகளைப் பற்றி பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தளமான ChatGPT-இடம் பகிர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்த தகவல்களை OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ளது.
OpenAI அளித்துள்ள தகவலின்படி, மொத்தப் பயனாளர்களில் 0.07% சதவீதமானவர்கள், தமக்குள்ள தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், பயம், பீதி (Anxiety) போன்ற தீவிரமான மனநலப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை ChatGPT உடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தற்போது ChatGPT தளத்தை சுமார் எட்டு கோடி பேர் வரை பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
அதில் 0.07% என்பது கணிசமான எண்ணிக்கையாக இருக்கும் என OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது.
AI தளங்கள் பயனாளர்களின் உணர்ச்சி மற்றும் உளவியல் நிலையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வின் அவசியத்தை OpenAI நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.





