ஆசியா

இந்தோனேஷியாவில் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் ; மூவர் பலி

இந்தோனீசியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோசமடைந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்காசார் நகரின் நகர மன்றக் கட்டடத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர்.அதில் குறைந்தது மூவர் உயிரிழந்தனர்.

இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் நகர மன்றச் செயலாளர் ரஹ்மத் மப்பதோபா தெரிவித்தார்.

தீப்பற்றி எரிந்த கட்டடத்தில் அந்த மூவரும் சிக்கியதாக அவர் கூறினார்.ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர மன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தீமூட்டியதாக அவர் குற்றம் சுமத்தினார்.

உயிரிழந்தோரில் பொதுமக்கள் நல்வாழ்வுப் பிரிவின் தலைவரும் பொது ஒழுங்குப் பிரிவின் உறுப்பினர் ஒருவரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

கொழுந்துவிட்டு எரிந்த கட்டடத்திலிருந்து தப்பிக்க நான்காவது மாடியிலிருந்து குதித்த ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!