இலங்கை செய்தி

பஸ் கட்டணத்தை குறைப்பை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

நாளை (01) முதல் பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தை கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய கட்டணம் 28 ரூபாவாகும்.

இதேவேளை, தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் நாளை (01) கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்பட வேண்டும் எனவும், அதன்படி நாளை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை