மத்திய கிழக்கு போர் விவகாரம்: டிரம்ப்– போப் லியோ இடையே கடும் வார்த்தை மோதல்
மத்திய கிழக்கில் இடம்பெறும் போர் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் முதல் அமெரிக்க போப்பாண்டவர் Pope Leo XIV இருவரும் முற்றிலும் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 05 அன்று தனது முதல் ஈஸ்டர் ஆசி உரையில் போப் லியோ, போர்களைத் தொடங்கும் அதிகாரம் கொண்டவர்கள் அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதன்பின்னர் கடந்த 07 ஆம் திகதி ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் “முழு நாகரிகமும் அழியும்” என டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இதற்கு பதிலாக போப் லியோ, இது ஈரான் மக்களுக்கெதிரான ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் என கண்டித்தார்.
பின்னர் கடந்த 11 ஆம் திகதி, அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், போப் லியோ “போரின் வெறியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 12 ஆம் திகதி அன்று ட்ரம்ப், போப்பை கடுமையாக விமர்சித்து, அவர் அரசியலில் தலையிடாமல் மத பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், போப் தனது நிலைக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் போப் லியோ இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “ட்ரம்ப் நிர்வாகத்தையோ அல்லது நற்செய்தியை உரக்கப் பேசுவதற்கோ நான் பயப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.





