உலகம் செய்தி

கோடி பேர் உயிர் தியாகம் செய்ய தயார் என ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு – இன்னும் சில நேரங்களில் நடக்கப் போவது என்ன?

ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி விதித்த 48 மணி காலவகாசம் இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஈரானுக்காக நாட்டில் உள்ள 1.4 கோடி பேர் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசஸ்கியன் தெரிவித்துள்ளார்.

ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவதாக ட்ரம்ப் சபதம் எடுத்துள்ள நிலையில் ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து வரும் நிலையில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களே இந்த காலவகாசம் உள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதி பெசஸ்கியன் தனது எக்ஸ் தளத்தில், ஈரானில் 1.4 கோடி பேர் உயிர் தியாகம் செய்ய இருப்பதாக பதிவிட்டுள்ளார். ஈரானின் மொத்த மக்கள் தொகை சுமார் 09 கோடி ஆகும்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஈரானை பாதுகாக்க ஒரு கோடியே 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈரானியர்களும் உயிர்த் தியாகம் செய்யவும் இருக்கிறோம். ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஈரான் இளைஞர்கள் அனைவரும் மனித சங்கிலியாக கைகோர்த்து மின்நிலையங்களை பாதுகாக்க திரள வேண்டும் என்று ஈரான் அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார்.

ஏற்கனவே ஈரானை இலக்குவைத்து வளைகுடாவில் உள்ள தளங்களில் இருந்து அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா குவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!