அமைதி முயற்சி தொடர்கிறது: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்களைத் தணிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை நடைபெற்ற இருதரப்புப் அமைதி பேச்சு எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையிலேயே மேற்படி கலந்துரையாடலுக்கு மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தானின் பிரதமர், அமைதியை ஏற்படுத்துவதற்குரிய முயற்சி தொடர்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தீர்க்கப்படாத சிக்கல்களைச் சரிசெய்ய பாகிஸ்தான் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.





