பாகிஸ்தான், இங்கிலாந்து இன்று மோதல்!
T -20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்று (24) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து England மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதவுள்ளன.
கண்டி, பல்லேகல Pallekele மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
T 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டிள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் பலம் பொருந்திய அணிகளாகும். இரு அணிகளும் இதற்கு முன்னர் உலகக்கிண்ணம் வென்றுள்ளன.
சூப்பர் – 8 சுற்றில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோத இருந்தது.
இந்த ஆட்டம் மழையால் ரத்தானதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் அரைஇறுதியை அடைய முடியும் என்பதால் இன்றைய மோதல் பாகிஸ்தானுக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.




