அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் பின்னர் வரும் 21 ஆம் திகதி மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)