60 நாட்கள் தான் அவகாசம் – யேமன் நாட்டவருக்கு அமெரிக்காவின் அதிரடி உத்தரவு
அமெரிக்க அரசு யேமனுக்கு வழங்கிய தற்காலிக பாதுகாப்பு (TPS) நிலையை இரத்து செய்துள்ளது.
இதனால், நாட்டில் வசிக்கும் 1,000 க்கும் மேற்பட்ட யேமன் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள்,
60 நாட்களில் அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டும்.
அவ்வாறு அவர்கள் செல்லாவிட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரந்த குடியேற்றக் கொள்கையின்
ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தேசிய நலனுக்கானது என அமெரிக்கா கூறுகின்ற போதிவும் யேமன் நாடு பல ஆண்டுகளாக மோதல்கள், பயங்கரவாதம், குற்றம், சுகாதார அபாயங்கள் மற்றும் கடத்தல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.





