இலங்கையில் யானையின் தாக்குதலால் நபர் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரமடுவ காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் (17) நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹபரன, சூரியகம- சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த தெவரக்கோட்டே கெதர பிரசன்ன (56வயது) எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரமடுவ ,மில்லகஸ்வெவ என்ற இடத்துக்கு தேன் எடுப்பதற்காக இருவர் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளனர்த.
உயிரிழந்தவரின் சடலத்தை குறித்த காட்டில் இருந்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து கொண்டு வந்து கந்தளாய் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்த கந்தளாய் பகுதியை சேர்ந்த கிரிகெதர சரத் ஆனந்த (46வயது) என்பவர் காயமடைநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.