இலங்கை செய்தி

எதிர்கட்சித் தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன – ஒருவர் கைது

விவசாயப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூரியவெவ, அந்தரவெவ பிரதேசத்தில் இன்று (15) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது, இரு தரப்பினரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்தக் கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

அங்கு ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்த போது, மற்றொருவர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏற்பாட்டாளர்கள் குறித்த நபரையும் அவருடன் வருகை தந்தவர்களையும் கூட்ட இடத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதன்போது இந்த அமைதியின்மை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளியேற்றியுள்ளனர். இதன்போது இந்த அமைதியின்மை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் சூரியவெவ பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், குழப்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்தனர்.

நிலைமை வழமைக்குத் திரும்பிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தில் உரையாற்றினார்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் சிலர் இந்தக் கூட்டத்தைக் குழப்புவதற்கு
முற்பட்டதாகக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளன்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!