அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, 153 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 49 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து, 104 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும், ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் வாக்களித்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!