பிரித்தானியாவில் புதிய அணுமின் நிலையத் திட்டம் – 8,000 வேலைவாய்ப்புகள்
அரசாங்கம் புதிய அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 8,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rolls-Royce (ரோல்ஸ் ராய்ஸ்) நிறுவனத்துடன் கடந்த ஆண்டு £2.5 பில்லியன் மதிப்பிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, Wylfa பகுதியில் அணுமின் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் வைல்ஃபா பகுதியில் 3,000 உள்ளூர் வேலைவாய்ப்புகளும், தேசிய அளவில் மேலும் 5,000 வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணுசக்தி தொழில் சங்கத்தின் (Nuclear Industry Association) தலைமை நிர்வாகி Tom Greatrex, இந்த முயற்சி பிரித்தானியாவின் முதல் மூன்று சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) கட்டுமானத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறினார்.
SMR (Small Modular Reactor) உலைகள் தொழிற்சாலையில் பகுதிகளாக தயாரிக்கப்பட்டு பின்னர் தளத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன.
இந்த மூன்று உலைகளும் இணைந்து, சுமார் 3 மில்லியன் வீடுகளுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம் வழங்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தை டாம் கிரேட்ரெக்ஸ் “வேல்ஸில் தூய்மையான மின்சாரம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் திறமையான வேலைவாய்ப்புகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்” என வர்ணித்துள்ளார்
மேலும், வைல்ஃபா தளம் தனித்துவமான பலங்களைக் கொண்ட முக்கியமான இடமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





