இலங்கையில் 7 முக்கிய வழக்குகளில் சிறப்பு விசாரணைக்கு புதிய அரசாங்கம் அதிரடி உத்தரவு
ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், இந்த வழக்குகள் பின்வருமாறு:
1. மத்திய வங்கி பிணைமுறி மோசடி (2015)
2. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்
3. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தமிழ் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் என அழைக்கப்படும் தராகி சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை
4. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி சமூக செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணை
5. 2006 ஆம் ஆண்டில் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் காணாமல் போனமை
6. 2022 ஆம் ஆண்டில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சந்தேகத்திற்கிடமான மரணம்
7. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகமவில் உள்ள ‘டபிள்யூ 15’ விருந்தகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம்