இஸ்ரேல், ஸ்பெயினுக்கிடையில் ராஜதந்திர போர் வெடிப்பு!
காசா போர்நிறுத்த நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து Gaza ceasefire coordination hub ஸ்பெயினை நீக்குவதற்கு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஈரான்மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்ததே நிலையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் நிலைப்பாடு இஸ்ரேலிய படையினரை அவமதிப்பதாகக் கருதும் நெதன்யாகு, தங்கள் நாட்டிற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான இந்த மோதல் சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு தமது வான் பரப்பை பயன்படுத்தவதற்கு ஸ்பெயின் இடமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





