“ஈரான் அணு ஆயுதத்தை விரும்புவதாலேயே பேச்சு தோல்வி”
அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு ஈரான் முற்படுகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத நோக்கத்தின் காரணமாகவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கு இடமளிக்கபோவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
எனினும், ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமான சூழல் இருந்ததாகவும், அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளே தடையாக இருந்ததாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi குறிப்பிட்டுள்ளார்.




