ஹார்முஸ் நீரிணையை ‘தூய்மைப்படுத்த’ நேட்டோ உதவ முன்வந்துள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு
முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையை பாதிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை தூய்மைப்படுத்த நேட்டோ உதவ முன்வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், நேட்டோ மீது அமெரிக்கா முன்பு ஏமாற்றம் அடைந்திருந்தாலும், தற்போது அந்த கூட்டணி நீரிணை பாதுகாப்புக்கு உதவ முன்வந்துள்ளதாக அவர் கூறினார்.
நீரிணையை சுத்தப்படுத்த அதிக நேரம் ஆகாது என்றும், விரைவில் அது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா கண்ணிவெடி அகற்றும் கப்பல்களை அனுப்பவுள்ளதாகவும், நேட்டோ உறுப்பினரான பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.




