அமெரிக்காவை தாக்கும் குளிர்கால புயல் – 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து
அமெரிக்காவில் கடுமையான குளிர்கால புயல் தாக்கம் காரணமாக 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கடுமையான குளிர்கால புயல் தாக்கம் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வட கரோலினாவிலிருந்து மெய்ன் (Maine) மாநிலம் வரை குளிர்கால புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு கனடாவின் சில பகுதிகளிலும் எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதன்முறையாக நியூயோர்க் நகரத்திற்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திள் தெரிவிக்கின்றன.





