இலங்கை செய்தி

விவசாயத்துறைக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்!

“உலகில் எந்தவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படாதிருப்பதற்கு எமது விவசாயிகளின் உன்னதமான அர்ப்பணிப்பே காரணமாகும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது.

அதன்பின்னர் மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையின் மீது கட்டியெழுப்பப்பட்ட இந்நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையை இதைவிட உயரிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடம் பாரிய திட்டம் இருக்கின்றது.

எந்தவொரு நாட்டிற்கும் தனக்கே உரித்தான ஒரு பயணப்பாதை இருக்கின்றது என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எமக்கே உரிய கலாசாரமும் பயணப்பாதையும் விவசாயத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது எனவும் குறப்பிட்டார்.

விவசாயத்துடன் பிணைந்துள்ள அந்த உன்னதமான கலாசார விழுமியத்தை இந்த புத்தரிசி விழா பிரதிபலிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். புதிய இளம் தலைமுறையினர் புதிய கருவிகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விவசாயத் துறையில் நாம் உழைப்பு ரீதியான பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். எனவே, விவசாயத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டியுள்ளது.

உலகம் முழுவதும் நிலத்தை தயார் செய்தல், விதைத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவில் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளன.

எனவே, மிக வேகமாக எமது விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் எம்மால் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்.” – என ஜனாதிபதி மேலும் கூறினார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!