அறிவியல் & தொழில்நுட்பம்

Metaவின் Gen AI, Googleஇன் Gemini பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெளியானது

Meta நிறுவனத்தின் Gen AI தளத்தை மாதத்திற்கு ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாய் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் கூறியிருக்கிறார்.

நிறுவனத்தின் வருடாந்திரப் பங்குதாரர்கள் கூட்டத்தில் ஸக்கர்பர்க் அதனைப் புதிய மைல்கல் என்று தெரிவித்தார்.

Gen AI எனப்படும் புதியனவற்றை உருவாக்கும் செயற்கைத் தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்துவதில் Google, Microsoft, OpenAI உட்பட பல நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

Meta AI, Meta நிறுவனத்தின் பல செயலிகளில் உள்ளிருக்கும் அம்சமாக உள்ளது. Meta AI தளத்தை நேரடியாக நாடி அதை எவ்வளவு பேர் பயன்படுத்தினர் என்ற விவரம் அளிக்கப்படவில்லை.

Google நிறுவனம் ஓராண்டுக்கு முன் அதன் தேடல் தளத்தில் AI அம்சத்தைப் புகுத்தியது. தற்போது அதை 1.5 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

தற்போது Google தேடல் தளத்தில் எதைப் பற்றித் தேடுகிறோமோ அதன் தொகுப்பு AI மூலம் தொகுப்பாக முதலில் இடம்பெறுகிறது. அதன் பின்னரே தேடல் தொடர்பான இணையத்தளங்கள் இடம்பெறுகின்றன.

Googleஇன் Gemini AI செயலியை மாதம் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாய் சென்ற வாரம் நடந்த சந்திப்பில் சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்