இலங்கை வருகிறார் மாலைதீவு ஜனாதிபதி
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோரிடையே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றன.
இந்தச் சந்திப்பின் போது, கடற்தொழில் துறையில் புதிய முதலீடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கூட்டு உற்பத்தி முயற்சிகள், பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் தயாரிப்புகள் மற்றும் இலங்கையிலிருந்து நேரடியாக மாலைதீவுக்கு மீன் ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது முக்கியமாக கலந்தாலோசிக்கப்பட்டது.





