இலங்கை செய்தி

இலங்கை கடவுச்சீட்டு டோக்கன் பெற மீண்டும் நீண்ட வரிசையில் மக்கள்

இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் நீண்ட வரிசையில் காத்து நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் தமது கடவுச்சீட்டை பெற இவ்வாறு காத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதிகாலை 4 மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை