பிரபல காமெடி நடிகரின் கால் அகற்றப்பட்டது – திரையுலகில் அதிர்ச்சி…

‘லொள்ளு சபா’ நடிகர் சிரிக்கோ உதயாவுக்கு சர்க்கரை வியாதியால் அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ காமெடி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் சிரிக்கோ உதயா. பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சந்தானத்துக்கு காமெடி வசனங்களையும் எழுதி கொடுத்துள்ளார்.
இதை தாண்டி, இசைத்துறையில் வயலின் வாசித்துள்ளார். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி செய்து அசத்துவது என பல திறமைகளை கொண்டவர் சிரிக்கோ உதயா. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த உதயா நேற்று ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மேல்சிகிச்சை எடுத்துவரும் காமெடி நடிகர் சிரிக்கோ உதயாவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங், ஏ.கே.ஈவென்ட் அருண் சஞ்சய், பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு, பணம் உதவி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது தந்தையின் நிலை பற்றி திரையுலகில் வேறு யாரிடமும் கூறவில்லை என்று அவரது மகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.