இலங்கை செய்தி

சட்டத்தரணி கொலை – சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொடை பகுதியில் கடந்த 13ம் திகதி சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சமப்வம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த புகைப்படத்திலுள்ள சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் விபரங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரின் புகைப்பட விபரங்கள்
உயரம் – சுமார் 05 அடி 05 அங்குலம்.
வயது – சுமார் 44 வயது.
உடல் நிறம் – கருப்பு, கண்கள் மஞ்சள் நிறத்துடன் கூடிய மந்தமான நிறம்.
சிறப்பு அம்சங்கள் – வலது கன்னத்திற்கு கீழே முகத்தில் ஒரு வெட்டு வடு காணப்படுகிறது.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் உருவாக்கப்பட்ட இந்த சந்தேக நபரின் தற்போதைய தோற்றத்தின் பல புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமாயின் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

D.I.G – மேற்கு மாகாண வடக்கு 071-8598008
பிரிவு அதிகாரி – நுகேகொட 071-8591641
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு பணிப்பாளர் 071-8592279

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!