குவைட் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதலால் பெரும் தீப்பரவல் – பாரியளவில் பொருள் சேதம்
குவைட்டில் உள்ள பெட்ரோலியக் கழகத்தின் பல எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்த தாக்குதலின் காரணமாக பொருள் சேதங்கள் பதிவாகியுள்ளதாக குவைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையெனஎன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.





