உலக சாதனை படைத்தார் கமிந்து மெண்டிஸ்
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாளான இன்று (26) கமிந்து மெண்டிஸ் புதிய சாதனையை படைக்க முடிந்தது.
எட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
மேலும், கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாசாதனையைகமிந்து படைத்துள்ளார்.
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி 306 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையின் தினேஷ் சந்திமால் டெஸ்ட் வாழ்க்கையில் தனது 16வது சதமாக 116 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி மற்றும் கிளென் பிலிப்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.