உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சி: ஜப்பானும் களத்தில்!

ஜப்பான் பிரதமர் Sanae Takaichi மற்றும் ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடலுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது.

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் பேச்சு நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இதற்கமையவே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானியர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே ஜப்பான் இந்த ராஜதந்திர முயற்சியில் இறங்கியுள்ளது.

பதற்றமான சூழலை விரைவாகக் குறைப்பதன் அவசியத்தை ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஈரானிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!