ஜாஹிர் கானை பின்னுக்குத் தள்ளி அபார சாதனை படைத்த ஜடேஜா
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரின் சுற்றுப் பயணம் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது.
முன்னதாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி இருக்கிறது.
இதனால், ஆறுதல் வெற்றி நோக்கி இந்திய அணி 3-வது மட்டும் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியது. தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. அதில், இந்திய அணியில் சிறப்பாக வந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.
இதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 309 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தை தக்க வைத்துள்ளார்.
மேலும், சர்வதேச டெஸ்ட் ஆல்-ரவுண்டர் பட்டியலிலும் அதிக புள்ளிகளுடன் முதல் இடத்திலே நீடித்து வருகிறார். இன்றைய போட்டியில், நியூசிலாந்து அணி சற்று சிறப்பாக விளையாடினாலும் ஜடேஜாவின் சுழலால் சற்று தடுமாற்றத்துடனே விளையாடியது.
ஜடேஜா (5 விக்கெட்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (4 விக்கெட்) இருவரும் தான் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி தங்களது முதலில் இன்னிங்ஸ்க்கு 235 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தற்போது, இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு விளையாடி வருகிறது.