அழிவின் விளிம்பில் உலகம்? அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்!
2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாகி வருகின்றன.
பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இதற்கமைய மூன்றாம் உலகப் போர் தொடர்பான கணிப்புக்களை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ரஷ்யா – அமெரிக்காவிற்கு இடையில் மோதல்கள் எழக்கூடும் எனவும், சீனா – தைவான் விவகாரம் இந்த போருக்கு அடித்தளம் இடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 நவம்பர் மாதத்தில் மனிதர்கள் விண்வெளி உயிரினங்களை (Aliens) நேரடியாக சந்திப்பார்கள் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். மனிதகுலம் மற்றொரு நாகரிகத்துடன் முதல் தொடர்பை ஏற்படுத்தும் என ஸ்கை ஹிஸ்டரி (Sky History) தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து பாபா வங்கா கூறியதாக சொல்லப்படும் கணிப்புகளும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மனிதர்கள் உருவாக்கிய இயந்திரங்கள், 2026ஆம் ஆண்டில் மனித புத்தியை மிஞ்சும் அளவுக்கு வளர்ச்சி அடையும் என்றும், தாங்களாக முடிவெடுக்கும் சக்தியைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் பாரிய பூகம்பங்கள், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்கள் குறித்தும் அவர் கணித்துள்ளார். இதனால் பூமியின் சுமார் 7 தொடக்கம் 8 சதவீத பகுதி கடுமையாக சேதமடையலாம் என்றும், கடல் மட்ட உயர்வு காரணமாக பல நகரங்கள் வரைபடத்திலிருந்தே மறையலாம் என்றும் கூறப்படுகிறது.





