வான்வழி தாக்குதலில் ஈரான் உளவுப்பிரிவு தலைவர் பலி!
இஸ்ரேல், அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Seyyed Majid Khademi என்ற அந்த உயர் அதிகாரி, IRGC இன் முக்கிய உளவுப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கி வந்தவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும், சில ஈரான் ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.




