உலகம் செய்தி

பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் தூதுக்குழு பேச்சு!

ஈரானைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் அமைதி பேச்சுகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை ஈரான் தூதுக்குழுவினர் ஏற்கனவே சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று பிற்பகல் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து ஈரானிய பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்புக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி பேச்சு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!