உலகம் செய்தி

பாகிஸ்தானால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது ஈரான்!

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் முன்மொழிந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்துள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் உறுதிப்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறியே ஈரான் நிராகரித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

நிலையான அமைதித் திட்டத்துக்கு வாஷிங்டன் தயாராக இல்லை என்றும், அந்நாட்டால் தங்களுக்கு காலக்கெடு விதிப்பதை ஏற்க முடியாது என்றும் ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

எனினும், போர் நிறுத்தத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதையே பாகிஸ்தான் தரப்பு பிரதான யோசனையாக முன்வைத்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் ஊடாகவே தமது தரப்பு திட்டங்களை அமெரிக்கா முன்வைத்துவருகின்றது என்ற விமர்சனம் உள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!