ஹார்மூஸை திறக்க உத்தரவு- 48 மணி நேர காலவகாசம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , ஈரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hormuz நீரிணையை திறக்க அல்லது ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு இணங்காவிட்டால் “கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த கருத்துகளை அவர் தனது Truth Social தளத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்பு, மார்ச் 27 அன்று, ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது 10 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்க பொருளாதாரத்திற்கு வரிகள் மூலம் கிடைத்த நன்மைகளைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, “அணு சக்தி ஈரானை கட்டுப்படுத்துவது அவசியம்” எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.




