ட்ரம்புக்கு கெட்ட காலம்: போர் விமானத்தால் வரப்போகும் வினை!
ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடைந்துவிட்டது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth அறிவிப்பு விடுத்து சில நாட்களுக்குள்ளேயே ஈரான் தனது வலிமையை நிரூபித்துள்ளது.
அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியே ஈரான் தனது வலிமையை நிரூபித்துள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மாயமாகியுள்ள அமெரிக்க படை வீரர் ஈரானிடம் சிக்கினால், அது போரின் போக்கை மாற்றி ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் உயிரிழப்புகளால் ட்ரம்ப் நிர்வாகம்மீது ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க மக்களுக்கு, இந்தச் சம்பவம் மேலும் சீற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஈரான் ராணுவம் வலுவிழந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், இந்தத் தாக்குதல் அவர்கள் இன்னும் சவாலான எதிரியாகவே இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
ஈரானின் மேற்படி தாக்குதல் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படாது என்று ட்ரம்ப் கூறினாலும், அமெரிக்க வீரர் சிறைபிடிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும் எனவும் மேற்படி செய்தியில் கூறப்பட்டுள்ளது.




