உலகம் கல்வி

கடும் அழுத்தத்தில் ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்றது – அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

ஈரான், மிகுந்த அழுத்தத்தின் கீழ் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனின் நிபந்தனைகளை ஈரான் மறுத்திருந்தால், அதன் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் எண்ணெய், எரிசக்தி உட்கட்டமைப்புகள் அடுத்த தாக்குதலின் இலக்குகளாக இருந்திருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றிருந்தால், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஈரானுக்கு பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், ஒரு ஒப்பந்தமே சிறந்தது என்பதை ஈரான் உணர்ந்ததாகவும் கூறினார்.

மேலும், “ சில நிமிடங்களில் ஈரானின் முழுப் பொருளாதாரத்தையும் முடக்கும் திறன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்தது. ஆனால் அவர் கருணையைத் தேர்ந்தெடுத்தார்” என்றும் ஹெக்ஸெத் தெரிவித்தார்.

இதேவேளை, ஈரானுக்கான காலக்கெடு முடிவடைவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தான், ஜனாதிபதி ட்ரம்ப் முதன்முதலில் சமூக ஊடகங்களில் போர் நிறுத்தம் குறித்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

கல்வி

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை
கல்வி

வரும் திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான  முதலாம் தவணை எதிவரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
error: Content is protected !!