IPL Match 16 – டெல்லி அணிக்கு இமாலய வெற்றி இலக்கு
ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட்- சுனில் நரைன் களமிறங்கினர். சால்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து நரைனுடன் இளம் வீரர் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சை சரமாரியாக விளாசினர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த ரஸல் (41) – ரிங்கு சிங் (26) அவர்களது பங்குக்கு அதிரடியை காட்டினார்.
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.