இந்திய அணிக்கு அபராதம் விதித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 3ம் திகதி ராய்ப்பூரில்(Raipur) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேரக் கொடுப்பனவுகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு கே.எல். ராகுலின் அணி இலக்கை விட இரண்டு ஓவர்கள் குறைவாக இருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ICC) நடுவர்கள் குழு தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சன்(Richie Richardson) இந்த தடையை விதித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி





