இலங்கை செய்தி

யாழ் விமான நிலைய பயணிகள் முனையத்தின் நிலை ஆய்வு – அமைச்சர் அனுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயம்

நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ் விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டிடத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்காக துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.

இதன்போது அவர் விமான நிலையத்தின் செயற்பாடடு பணிகளையும் ஆராய்ந்துள்ளார்.

800 சதுர மீற்றருக்கும் அதிகமான புதிய பயணிகள் வருகை முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆராய்ந்த அவர் குறித்த பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

குறித்த விமான நிலையத்தின் ஊடாக கடந்த ஆண்டு 53,443 பயணிகள் தமது விமான பயணங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இது மாபெரும் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சென்னை விமான நிலையத்திலிருந்து நாளாந்தம் விமானப் பயணங்கள் இடம்பெறுவதுடன் வாரத்திற்கு 03 தடவைகள் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி நகரிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு விமான பயணங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியாவின் இன்டிகோ விமான நிறுவனம் குறித்த சேவைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!