பங்குச் சந்தையை உலுக்கிய சீனாவின் Deepseek செயலி குறித்து வெளிவரும் தகவல்
சீனாவின் Hangzhou நகரில் Deepseek செயற்கை நுண்ணறிவுச் செயலி உருவாக்கப்பட்டது.
அதே பெயர் கொண்ட நிறுவனம் செயலியை உருவாக்கியது. அதன் சேவைகள் இலவசமாகவும் வரையறையின்றியும் மக்களுக்குக் கிடைக்கின்றன.
யார் வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்தித் தங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். அதே நிறுவனம் வெளியிட்ட DeepSeek R1 செயலி பங்குச் சந்தையை உலுக்கியுள்ளது.
அது அதிவேகமாக பதிவேற்றம் செய்யப்பட்டதைக் கவனித்ததாகச் சீனா கூறியது.
DeepSeek R1 அறிமுகமான தினத்தில் அதன் நிறுவனர் Liang Wenfeng, சீனப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) ஏற்று நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
இதேவேளை, சீனாவின் செயற்கை நுண்ணறிவுச் செயலியான DeepSeek அதிகமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டதில் Nvidia தொழில்நுட்ப நிறுவனம் சுமார் 593 பில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளது.
முன்னணியில் இருந்த Nvidia நிறுவனம் வரலாற்றில் ஆக அதிக இழப்பைச் சந்தித்து இப்போது சந்தையில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதாய் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சில்லு உற்பத்தி நிறுவனங்களான Broadcom, AMD, தொழில்நுட்ப நிறுவனங்களான Microsoft, Googleஇன் Alphabet போன்றவற்றின் பங்குகளும் சரிந்தன.
Deepseek, செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டை சிறப்பாக எடுத்துக்காட்டுவதாய் Nvidia அறிக்கை வெளியிட்டது. சில்லு ஏற்றுமதியில் அமெரிக்கக் கட்டுப்பாடுகளைச் சீன நிறுவனம் மீறவில்லை என்று தாம் நம்புவதாகவும் Nvidia கூறியது.