இந்தியா செய்தி

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க இந்தியா கையில் எடுத்துள்ள புதிய அணுகுமுறை!

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, வங்கதேசத்துடனான தனது  ஆற்று எல்லைப் பகுதியில் விஷப் பாம்புகளையும் முதலைகளையும் பயன்படுத்த இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

4,096 கி.மீ நீளமுள்ள எல்லையின் சதுப்பு நில, வேலியிடப்படாத பகுதிகளில் பௌதீகத் தடைகளை அமைப்பதற்கு மாற்றாக இந்த நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.

மார்ச் 26 என திகதியிடப்பட்ட, எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒரு உள் குறிப்பாணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த திட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திட்டத்துடன் ஒத்துப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி திட்டமானது  மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில், முக்கியமாக சுமார் 175 கி.மீ எல்லையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!