6 வருட காத்திருப்புக்கு பின் முதல் அப்டேட்டை வெளியிட்ட இந்தியன் 2 படக்குழு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்தது.
இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து மாஸ் காட்டி இருந்தார். இதையடுத்து அப்படத்தி
சுமார் ஓராண்டு கடின உழைப்புக்கு பின்னர் வெற்றிகரமாக ஷூட்டிங்கை நிறைவு செய்து பின்னணி பணிகளை தொடங்கி உள்ள படக்குழு, தற்போது அதன் முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிற நவம்பர் 7-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி நவம்பர் 3-ந் தேதி இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். படம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பின் அப்டேட் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
Celebration begins early
Get ready for "INDIAN-2 AN INTRO" a glimpse of #Indian2
releasing on NOV 3
#HBDUlaganayagan
Ulaganayagan @ikamalhaasan
@shankarshanmugh
@anirudhofficial
@dop_ravivarman
@LycaProductions #Subaskaran @RedGiantMovies_
… pic.twitter.com/awLd8I0zra
— Lyca Productions (@LycaProductions) October 29, 2023