இலங்கை செய்தி

இலங்கை விஜயத்தின்போத வடக்கு, கிழக்கு செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை வருகின்றார்.

இவ்விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களைப் பார்வையிடவுள்ளார்.

முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று வெளிவிவகார வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!