இந்திய அணி வெற்றி பெற 150 ஓட்டங்கள் இலக்கு
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள், பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
(Visited 15 times, 1 visits today)