அமெரிக்கப் போர் விமானங்கள் வீழ்ச்சி – அரிதான சம்பவங்களின் அதிர்ச்சி பின்னணி
அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவங்கள் கடந்த சில பத்தாண்டுகளில் மிகவும் அரிதாகவே பதிவாகியுள்ளன.
மார்ச் மாத தொடக்கத்தில், குவைட் வான்வெளியில் பறந்த மூன்று F-15 fighter jet போர் விமானங்கள் “தற்செயலான நட்பு தாக்குதல்” காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையமான CENTCOM தெரிவித்தது. இதில் இருந்த ஆறு விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர்.
அதே மாதம் 12ஆம் திகதி, மேற்கு ஈராக் பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு முன்பு, 2003 ஏப்ரல் 7 அன்று ஈராக் போர் காலத்தில், F-15E Strike Eagle விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானி Eric Das மற்றும் ஆயுத அதிகாரி William Watkins உயிரிழந்தனர்.
அடுத்த நாள், பாக்தாத் பகுதியில் ஒரு A-10 Thunderbolt II விமானம் தரை-வான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும், விமானி பாதுகாப்பாக வெளியேறினார்.
மேலும், 2011 மார்ச் மாதம் வடகிழக்கு லிபியா பகுதியில் மற்றொரு F-15E விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானியை மீட்க பல விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்தது.
இந்த சம்பவங்கள், அமெரிக்கப் போர் விமானங்கள் எதிரி தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்படுவது மிகவும் அபூர்வமானது என்பதை காட்டுகின்றன.




