உலகம் செய்தி

மியூனிக் பாதுகாப்பு மாநாடு : ஐரோப்பாவுக்கு அமெரிக்காவின் நம்பிக்கை செய்தி

வொஷிங்டனும் ஐரோப்பாவும் ஒன்றிணைந்தவை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio)
தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் இடம்பெறும் மியூனிக் (Munich) பாதுகாப்பு மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்களிடம் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“ஐரோப்பா வலுவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், ட்ரம்ப் (Donald Trump) தலைமையிலான அமெரிக்கா உலகளாவிய “புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பை” முன்னெடுக்க விரும்புகிறது என்றும் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறியுள்ளார்.

இருப்பினும், இடம்பெயர்வு (migration) குறித்து அவர் ஐரோப்பாவை விமர்சித்தார்.

வெகுஜன இடம்பெயர்வு “நாகரிக அழிவுக்கு” வழிவகுக்கும் என்றும், மேற்கத்திய நாடுகளை ஸ்திரமின்மைக்கு தள்ளக்கூடும் என்றும் எச்சரித்தார்.

இதேவேளை “வலுவான நேட்டோவில் வலுவான ஐரோப்பா தான் அட்லாண்டிக் கடல்கடந்த உறவை வலுப்படுத்தும்” என நேட்டோ (NATO) தலைவர் மார்க் ருட்டே (Mark Rutte), கூறினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!