இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடிய சகோதரன்… சுத்தியலால் அடித்து கொலை செய்த இளைஞர்!

பெங்களூரு புறநகரின் ஆனேகல் நகர் அருகே உள்ள நெரிகா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது 15 வயது சகோதரர் பிரனேஷ். இந்நிலையில் இச்சிறுவன் கடந்த புதன்கிழமை இரவு சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பிரனேஷின் பெற்றோர் அவரை தேடினர். இந்நிலையில் பிரேனஷை யாரோ கொலை செய்து சடலத்தை வீசிச் சென்றுள்ளதாக அவரது சகோதரர் சிவக்குமார் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிவக்குமார் பொலிஸாரிடம் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் சுத்தியலுடன் செல்வது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

தொடர் விசாரணையின் பின்னர் பிரனேஷை சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்றதாக சிவக்குமார் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிஸார் தொடர்ந்து விசாரித்ததில், பிரனேஷ் தனது மொபைலை எடுத்துக்கொண்டு, நாள் முழுவதும் கேம் விளையாடியதால் ஆத்திரமடைந்து சுத்தியலால் அடித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவகுமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!