இலங்கை செய்தி

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

வாகனங்கள் உட்பட 930 இதர பொருட்களுக்கு இறக்குமதி தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி தடைகளை நீக்குவது செப்டம்பர் முதல் வாரத்தில் இரண்டு கட்டங்களாக செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், அதை ஒரு மூலோபாய திட்டத்தின்படி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் அரசாங்கத்தின் கவனம் குவிந்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை